சொல்நிகழ்வெண் கருவி
சொல்நிகழ்வெண் கருவி
அகரவரிசை என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை அம்மொழியின் முறைப்படி அடுக்கப்பட்ட எழுத்துக்களின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் அகரம் தொடங்கி எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துக்களாக கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு அகரவரிசை அடிப்படையான ஒன்று. அகரம் தொடங்கி னகரம் வரை சொற்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு சொற்களை அகரவரிசைப்படி அமைத்து அந்த சொற்களின் நிகழ்வெண்ணையும் அளிக்கும் மென்பொருள் சொல்நிகழ்வெண் கருவி எனப்படும். சொல்நிகழ்வெண் கருவி என்பது இயற்கை மொழி ஆய்விற்கான அடிப்படை கருவி. இதனைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நூலின் சொல்நிகழ்வெண் பட்டியலை மட்டும் அல்லாது இதன் இடைமுகத்தில் பல நூல்களை உள்ளீடு செய்து அவற்றின் சொல்நிகழ்வெண்களையும் பெற இயலும். சான்றாக எட்டுத்தொகையின் எட்டு நூல்களுக்கும் ஒரே நேரத்தில் சொல்நிகழ்வெண்களைப் பெறலாம்..
சொற்சூழல் கருவி மற்றும் சொற்சூழல் கருவிக்கான பயனாளர் கையேடு ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும்