அகரவரிசைக் கருவி

அகரவரிசைக் கருவி
அகரவரிசை என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை அம்மொழியின் முறைப்படி அடுக்கப்பட்ட எழுத்துக்களின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் அகரம் தொடங்கி எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துக்களாகக் கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு அகரவரிசை அடிப்படையான ஒன்று. அகரம் தொடங்கி னகரம் வரை சொற்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நூல்களில் இடம்பெறும்சொற்களை அகரவரிசைப்படி அமைத்துத்தரும் மென்பொருள் அகரவரிசைக்கருவி எனப்படும்.
அகரவரிசைக் கருவி மற்றும் அகரவரிசைக் கருவிக்கான பயனாளர் கையேடு ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும்