சொற்சூழல் கருவி

சொற்சூழல் கருவி
சொற்சூழல் கருவி என்பது கொடுக்கப்பட்ட ஒரு செய்யுளில் அமைந்துள்ள சொற்களின் சூழலைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அச்சொல்லின் முன் உள்ள சொற்கள் பின் உள்ள சொற்கள் ஆகியவற்றை ஓர் அடைவாகப் பயனாளருக்கு இனம் காட்டக்கூடிய கணினி நிரல். இம்முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் சொல், சொல் நிகழ்வெண், முதன்மைச் சொல்லுக்கு முன் உள்ள சொற்கள், முதன்மைச் சொல்லுக்குப் பின் உள்ள சொற்கள், செய்யுள் இடம்பெற்றுள்ள மூலநூலின் அடிகள் போன்றவற்றைப் பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு மொழியில் அமையும் சொற்களின் முன்னாகவும், பின்னாகவும் இடம்பெறும் எண்ணற்ற (1-கிராம், 2-கிராம்,…. என்-கிராம்) சொற்களை இனம் கண்டு ஆராயும் ஆய்வுகளுக்குத் துணை நிற்கிறது. இயற்கை மொழி ஆய்வில் உரை சுருக்கி, சொல் வங்கி, தேடுபொறி போன்ற கருவிகளின் உருவாக்கத்தில் இச்சொற் சூழல் கருவி அடிப்படையாக அமைகின்றது.

சொற்சூழல் கருவி மற்றும் சொற்சூழல் கருவிக்கான பயனாளர் கையேடு ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும்

சொற்சூழல் கருவி பயனாளர் கையேடு

 

©மொழித் தொழில்நுட்பப் புலம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100

best view : Google Chrome or Mozilla Firefox